நிலையானதும் பிரகாசமானதுமான எதிர்காலத்தை நோக்கி இலங்கை: சவால்களை எதிர்கொள்ளும் உலகம், மீண்டு வரும் நாடு

OruvanOruvan

இலங்கை தற்போது நிலையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் SDG இலக்குகளை அடைவதற்கு நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய உத்தி இன்று (31) அலரிமாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ESCAP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் (Armida Alisjahbana) திருமதி. Armida Alisjahbana ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிலையான வர்த்தகங்களின் அபிவிருத்தி மற்றும் ஊக்குவித்தல் இல்லாமல் நாட்டின் தொலைநோக்குப் பார்வையை அடைய முடியாது என பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்.

உலகம் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காலநிலை மாற்றம், பொருளாதார கொந்தளிப்பு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் சிலவற்றை குறிப்பிடலாம்.

இந்த நிலையிலும் கூட எமது நாடு மீண்டு வருவதற்கு மாத்திரமன்றி, வளமான மற்றும் நிலையான மற்றும் பலமான இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.