அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த சாந்தனின் தாய்: சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவதாக அமைச்சர் உறுதியளிப்பு (காணொளி)

OruvanOruvan

Douglas Devananda M.P

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

மேலும், சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது.