பேராதனை பல்கலை. மாணவர்கள் போராட்டம்: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

OruvanOruvan

Peradeniya

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வட் வரியை குறைத்தல் மற்றும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பேராதனை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், கலஹா சந்திக்கு வந்தபோது அதனைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் சற்று நேரம் வரை மோதல் நிலை தொடர்ந்துள்ளது.