சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம்: 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

OruvanOruvan

Strike

சுகாதார துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

அதன்படி, நாளை காலை 06.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் 72 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.

மருத்துவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவைக் கோரி இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து.