'கெஹலிய கோ வில்லேஜ்': ஐவர் கைது, பொலிஸாரின் விசாரணைக்கு டிமிக்கி

OruvanOruvan

கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி 'கெஹலிய கோ வில்லேஜ்' என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நோய் எதிர்ப்பு மருந்து தொடர்பான வழக்கு தொடர்பில் இரண்டாவது தடவையாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சருக்கு விசாரணை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் மற்றுமொரு வழக்குக்காகச் சென்றிருந்த போது, ​​ஊடகவியலாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று ஈடுபட்டிருந்த சில அத்தியாவசிய கடமைகள் காரணமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக முடியாமல் போனதாக அமைச்சரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வேறு திகதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.