இலங்கையில் முதற்தடவையாக பச்சை நிற ஐஸ் போதைப் பொருள்: பெண் ஒருவர் கைது, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

OruvanOruvan

அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன், இலங்கையில் முதன்முறையாக இந்த பச்சை ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு, ஐந்து பாக்கெட்டுகளில் 5 கிராம் எழுபது மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.