இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் FAO பிரதிநிதிகள் குழு: விவசாய அமைச்சரை சந்தித்தும் பேச்சு

OruvanOruvan

FAO

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள அதன் ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 37 ஆவது அமர்வின் ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

குறித்த மாநாடானது பெப்ரவரி 19 - 22 முதல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

மாநாட்டின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள FAO வின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 46 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க, பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.