யாழில் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவேந்தல் (காணொளி): “எப்பேர்பட்ட மனுஷன்யா” கதறும் ரசிகர்கள்

OruvanOruvan

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 31வது நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன்னாலை தெற்கு பகுதி கிராம மக்களால் இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வின் பின்னர் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த ரசிகர்கள்,

"எங்கள் மனதில் வாழ்ந்த செல்வம். இறக்கும் வரையில் மக்களுக்கு உதவிசெய்த கொடை வள்ளல்.கேப்டன் விஜயகாந்தின் 31வது நாள் நினைவேந்தல் இலங்கை ரசிகர்களினால் நினைவுகூறப்பட்டுள்ளது. எம்மால் இயன்ற முறையில்

அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

கேப்டன் விஜயகாந்த் என்றுமே நம் மனதில் வாழ்ந்துக்கொண்டிருப்பார். தழிழ் மக்களுக்கு பாடுப்பட்டு உழைத்தவர்.

ஆனால் ஒரு முறையேனும் தமிழக முதல்வராக தெரிவுசெய்யப்படவில்லை. தமிழ் மக்களுக்காய் பாடுப்பட்டு உழைத்தவரை நாம் என்றும் மறக்காது நினைவில் வைத்துக்கொண்டு அவரது புதல்வரான விஜய பிரபாகரனை முதல்வர் கதிரையில் அமரச்செய்யவேண்டும்.

ஒரு தலைவனாக சிறந்த முறையில் செயற்பட்ட கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.”