சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short Stories

சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டிருந்ததாக தெரிவித்து கடந்த வருடம் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அண்மையில் வீதி விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மஹியங்கனை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் 55-60 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுவதுடன், அவரது அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன பொறுப்பேற்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர பெர்னாந்து நேற்று (30) ஓய்வுபெற்ற நிலையில், 07வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜே.வி.பி கலந்துரையாடல்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (ஜன.31) இடம்பெற்றுள்ளது. வர்த்தகத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கொள்கை அணுகுமுறைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சிசு ஒன்றின் சடலம் மீட்பு

ராஜகிரிய, மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் இன்று (31) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சரிடம் அமெரிக்க தூதுவர் வழங்கிய உறுதிமொழி

இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு சவால்களுக்கு ஆதரவளிக்க கூடுதல் உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் நேற்று நடைபெற்ற சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டியை இலவசமாக காணலாம்

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தின் எதிர்வரும் 2ஆம் திகதிமுதல் 6ஆம் திகதிவரை நடைபெற உள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை இலவசமாக காணும் சந்தர்ப்பம் ரகிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சஜித்தின் முடிவில் பொன்சேகா அதிருப்தி

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொண்டமைக்கு அக்கட்சியின் உப தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்தால் கோட்டாபய ராஜபக்ஷவையும் இணைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவித்த ரொஷான் ரணசிங்க

65 வயதுக்கு முன்னதாக அரசியலை விட்டு வெளியேறி நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக செயற்பட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரச சேவையில் இருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு நிர்வாக சேவைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CBSL - ஆளும் சபைக்கு சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளும் சபைக்கு சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.

தயா ரத்நாயக்க ஐ.ம.ச இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பொன்சேகா அதிருப்தி

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அதிருப்தி வௌியிட்டுள்ளார். தயா ரத்நாயக்க கோட்டாபயவுடன் இணைந்து செயற்பட்டார். அண்மைக்காலம் வரை கோட்டாபயவின் ஆதரவாளராகவே இருந்தார். கோட்டாபயவின் வலது கரம் போன்றவர். அவரை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொண்டால் அடுத்ததாக கோட்டாபயவையும் இணைத்துக் கொள்ளலாம்.

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு புதிய பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கெஹெலியவுக்கு சீ.ஐ.டி. அழைப்பு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று (31) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியக் கடன் உதவியின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் இம்யூனோகுளோபின் மருந்து கொள்வனவில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம்

அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளன. இலங்கை மின்சார சபையை பகுதிகளாக பிரித்து விற்பனை செய்தல்,அரச நிறுவனங்களை விற்பனை செய்தல்,தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களை ஒடுக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பு - 729 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தந்தை தன்னை துஷ்ப்பிரயோகம் செய்ததாக மகள் பொலிஸில் முறைபாடு

பதின்மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு எதிராக, துஷ்ப்பிரயோக முறைப்பாட்டை நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தந்தை தன்னை துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துள்ளதாக மகள் தெரிவித்துள்ளார்.

வெட் வரியை குறைக்குமாறு கோருவதில் பயனில்லை

வெட் வரியை குறைக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது வீண் செயல் எனவும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொருத்தமான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டுமெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணம் அத்தியாவசிய கொடுப்பனவுகள் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

அரசாங்கத்துக்கு எதிரான பாரிய பேரணியொன்றை மீண்டும் கொழும்பில் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், பேரணியின் போது பொலிஸார் அராஜகமாக செயற்பட்டதாகவும், தேவையற்ற முறையில் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

விசித்திரமான சாரதி அனுமதிப்பத்திரம்

எப்பாவல, யகல்லேகம பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு, அவர் செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும் வாகனத்தின் வகையினை குறிப்பிடாது வெறும் புள்ளிகளுடனான சாரதி அனுமதிப்பத்திரத்தினை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.