யாழ்.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் திடீர் மரணம்: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North -East News updates

யாழ்.சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் திடீர் மரணம்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் ஜனவரி மாதம் 26 ஆம் திகதியன்று யாழ். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென இளைஞன் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அந்த இளைஞன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் கத்திகுத்துக்கு இலக்கான இளம்குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார். இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே தாக்குதலுக்கு காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.