யாழில் கத்திகுத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East news

யாழில் கத்திகுத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்

வவுனியா குருமன்காடு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து 29 வயதான ஜெனிட்டா என்ற பெண்ணின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டதாக தெரிவித்துள்ளனர்.குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பொலிஸார் மீது சரமாரியாக தாக்குதல்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் குழுவாக நின்றவர்களை சோதனையிட முற்பட்டபோதே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழில் கஞ்சாவுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.