மஹிந்த அமரவீர இன்று இராஜினாமா?: சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி

OruvanOruvan

Mahinda Amaraweera M.P

கமத் தொழில் அமைசசர் மஹிந்த அமரவீர இன்று முக்கிய பதவியொன்றில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன், மஹிந்த அமரவீர தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இராஜினாமாச் செய்த பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும், வெற்றிலைச் சின்னத்தின் கீழ் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.