கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் போர்க் கப்பல்: இலங்கை கடற்படையினர் விசேட வரவேற்பு

OruvanOruvan

PNS SAIF arrives at port of Colombo

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான SAIF இன்று (30) உத்தியோகப்பூர்வ விஜயமாக கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் மரியாதைகளுடன் வரவேற்றனர்.

SAIF என்பது 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும்.

இது கேப்டன் மொஹ்ஹமது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

கப்பல் கொழும்பில் நங்கூரமிட்டிருக்கும் போது, ​​அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படை கப்பலுடன் ஒரு பயிற்சி நடவடிக்கையினையும் பாகிஸ்தான் கப்பல் நடத்தும்.

விஜயத்தை முடித்துக் கொண்டு கப்பல் எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

OruvanOruvan

PNS SAIF arrives at port of Colombo