கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சுகளுக்கு புதிய வாகனம்: அமைச்சரவை அனுமதி

OruvanOruvan

New vehicle import - Sri Lanka

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, கட்டுமான வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் தவிர்ந்த வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியது.

இந்த நிலையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன நிதி அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை தீர்மானித்து.

இதற்கமைய, 2366/19 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.