கேப்பாபிலவு போராட்டம்: நான்காவது நாளாக தொடரும் குடும்பங்களின் அவலம்

OruvanOruvan

கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த இரு குடும்பங்கள் தங்களுக்கு நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்து நீதிகோரி நான்காவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,

தங்களுடைய வீட்டில் வசிப்பதற்கே எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் இதுவரை எவ்விதமான உரிய நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை.

பாதுகாப்பின்மை காரணமாகவே வீதிக்கு இறங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொடர் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளோம்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட வேளை வீட்டில் தனிமையில் இருந்த சிறார்கள் இருவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தொடரும் அடாவடித்தன செயற்பாடுகளுக்கு நீதி வேண்டும்” என தெரிவித்தனர்.