பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்: தீர்வு இல்லையென்றால் பெப்ரவரியில் மீண்டும் போராட்டமாம்

OruvanOruvan

File Photo

பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (30) பிற்பகல் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவுள்ளதாக இலங்கை பொது பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷனக போபிட்டிய குறிப்பிட்டார்.

இதனிடையே, தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொடுப்பனவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதிலும், நாடு திரும்பிய ஜனாதிபதி இதுவரை தம்முடன் கலந்துரையாடவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.