சஜித்தின் ஆலோசகரா யுத்தக் குற்றங்களை மறுப்பவர் நியமிப்பு: எதிர்ப்பை வெளியிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன்

OruvanOruvan

Ambika satkunanathan

யுத்த குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி யுத்த குற்றங்கள் இடம்பெற்றதை மறுக்கும் ஒருவரை ஆலோசகராக நியமித்துள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்த குற்றங்கள் இடம்பெறவில்லை எனவும் எவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டியதில்லை எனவும் அந்த கட்சி கருதுவதை வெளிப்படுத்தியுள்ளது .

தென்னிலங்கையின் அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.” என தமது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.