சுற்றுலா பயணிகளின் கவனத்துக்கு: சபாரி ஜீப் கட்டணம் அதிகரிப்பு
யால மற்றும் பூந்தல தேசிய வன பூங்காவில் சுற்றுலா ஜீப் கட்டணம் 2,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, Toyota Hilux மற்றும் Mitsubishi வாகனங்கள் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
அன்றாடக் கட்டணம் 28,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
மகேந்திரா மேக்சி மற்றும் டாடா காரில் 4 மணி நேர பயணக் கட்டணம் 11,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாயாகவும், அன்றாடக் கட்டணம் 26,000 ரூபாவிலிருந்து 28,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யால சபாரி ஜீப் சங்கத்தில் சுமார் 475 ஜீப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பால் ஜீப் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த தொழிலில் ஈடுபடும் இடைத்தரகர்களால் ஜீப் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் தமது சங்க உறுப்பினர்கள் வசூலிக்கும் கட்டணம் மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.