முல்லைத்தீவு பட்டத் திருவிழாவில் தமிழீழ வரைப்படம்: இன்றைய வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North East News

முல்லைத்தீவு பட்டத் திருவிழாவில் தமிழீழ வரைப்படம்

முல்லைத்தீவு பட்டத்திருவிழாவில் தமிழீழ வரைப்படம் மற்றும் கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றிய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்கரையில் படத்திருவிழா நேற்றையதினம் இடம்பெற்றபோது, முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் மற்றும் கார்த்திகை பூ படம் என்பவற்றுடன் பங்கேற்றதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று பதவியேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர் , இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர்.

இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ரீதியில் சாதித்த வடமாகாண வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வட மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது, கடந்த ஆண்டு வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.