புதிய மறைமுக வரிகள் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது: இராஜாங்க அமைச்சர்

OruvanOruvan

Ranjith Siyambalapitiya

பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வகையில் எந்தவொரு புதிய மறைமுக வரியையும் அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (29) கேகாலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவித்த சில விடயங்களாவன:

  • தற்போதைய வரி வீதத்தை மேலும் அதிகரிப்பதற்கு அரசுக்கு எந்த எண்ணமும் இல்லை.

  • நாங்கள் அரச வருவாயை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறோம்.

  • இதன் விளைவாக மறைமுக வரிகளின் சதவீதத்தை குறைத்து, மக்கள் மீதான சுமையை குறைக்க முடியும்.

  • எனினும் 2025 இல் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு இணங்க உரிய வரி விதிக்கப்படும் அதே வேளையில், இந்த வரியானது முற்போக்கான வரியாக இருக்கும்.

  • இந்த வரி அதிக அளவு சொத்து வைத்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் - என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.