கொழும்பில் நாளை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி: வாழ்க்கை செலவு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி போராட்டம்

OruvanOruvan

Samagi Jana Balawegaya

நாளை (30) கொழும்பில் மாபெரும் கண்டன அணிவகுப்பு மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அறிவித்துள்ளது.

இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக இந்த பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் உறுதிப்படுத்தியுள்ளார்.