இராஜாங்க அமைச்சராக சற்றுமுன் பதவியேற்றார் லொஹான் ரத்வத்த: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்

OruvanOruvan

Lohan Ratwatta was recently sworn in as a state minister

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் இதற்கு முன்னரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியமையும் விசேட அம்சமாகும்.

லொஹான் ரத்வத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இவர் முன்பு சிறைத்துறை சீர்திருத்த அமைச்சராக பதவி வகித்தார்.

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதி ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமைக்காக சர்ச்சைக்குள்ளாகி இருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று லொஹான் ரத்வத்த,கடந்த செப்டம்பர் 21, 2021 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.