மாவனல்லையில் தீப்பரவல்: 30 கடைகள் தீக்கிரை

OruvanOruvan

Fire spread

மாவனல்லை பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் 30 கடைகள் எரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.