பெண்களுக்கான இரவு பணியில் மாற்றம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை

OruvanOruvan

Change in Night Work for Women

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சட்டத்திற்கு அமைய இரவு 10 மணிக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளிட்ட நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும் என்றும் திருத்தப்பட்ட சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, பதினெட்டு வயது பூர்த்தி செய்யப்பட்ட பெண்களை மாத்திரம் இவ்வாறு பணியில் அமர்த்துவதற்கு அமைச்சகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

குறித்த திருத்தம் தொடர்பான சட்டமூலம் தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.