மாடிவீட்டில் கஞ்சாப்பயிர்ச் செய்கை: அமெரிக்க நாட்டவர் கைது, இராணுவத்தினர் வழங்கிய புலனாய்வு தகவல்

OruvanOruvan

பெலியத்த பிரதேசத்தில் மாடிவீடொன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வௌிநாட்டவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பெலியத்தை, சிட்டினாமலுவ பிரதேசத்தில் நேற்று (27) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சிட்டினாமலுவ பங்களாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் தளத்தில் சட்டவிரோதமாக குஷ் வகை கஞ்சாப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்த அமெரிக்கர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டுப் பிரஜை, தான் வாடகை அடிப்படையில் எடுத்த வீட்டில் இந்த தோட்டத்தை கவனமாக பராமரித்து வந்துள்ளார். சந்தேக நபர் தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேல் தளத்தின் ஒரு பகுதியைச் சுற்றி பொலித்தீன் உறையினால் மறைத்து பூந்தொட்டிகளில் கஞ்சா செடிகளை வளர்த்து பராமரித்துள்ளார்.

இராணுவத்தினரின் புலனாய்வுத் தகவலுக்கு அமைய பெலியத்த பொலிஸார் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு பிரஜையை கைது செய்துள்ளனர்