வயதாவதை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் சாதனை

OruvanOruvan

Prof. Sameera R. Samarakon

வயது முதிர்வை தாமதப்படுத்தும் இயற்கை மருந்து ஒன்றை தயாரித்து வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர் சமரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து இயற்கை மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நீண்டகாலமாக மேற்கொள்ளப்ப்டு வந்த ஆராய்ச்சிகளின் பின்னர், தற்போது அந்த மருந்தை தயாரிக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரியல் இரசாயனம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள யுனிவர்சிட்டி பிஸ்னஸ் லிங்கேஜ் ஊடாக, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மிக விரைவில் இந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வரவுள்ளதாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.