அடுத்த ஜனாதிபதி அனுரகுமார என்பது முழுமையான நம்பிக்கை: பதவியேற்கும் நாள் இரவே பாராளுமன்றம் கலைக்கப்படும்

OruvanOruvan

Ex MP Wasantha Samarasinghe

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என நூற்றுக்கு நூறு வீதம் நம்புவதாக அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்று வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை கட்டாயம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும். அதனை எவராலும் ஒத்திவைக்க முடியாது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க என்பது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.வேறு நபர்கள் பல்வேறு கதைகளை கூறினாலும் அவை செல்லுப்படியற்றவை.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்யும் அன்றைய நாள் இரவிலேயே தற்போதைய பாராளுமன்ற கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.