சனத் நிஷாந்தாவின் பூதவுடல் நல்லடக்கம்: பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி

OruvanOruvan

Sanath Nishantha Funeral

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தாவின் பூதவுடல் இன்று (28) புத்தளம் ரஜகடலுவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தாவின் உறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 1 மணி முதல் இடம்பெற்றது.

ஆராச்சிக்கட்டுவவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முழுமையாய் வாடிய மஹிந்தவின் முகம் ; சனத் நிஷாந்தவுக்கு இறுதி அஞ்சலி, திரண்ட பொதுமக்கள்

உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்குகள் தற்போது ராஜதந்தலுவ திருக்குடும்ப தேவாலய மயானத்தில் நடைபெற்று வருகின்றது.

அவரது உடல் ஆராச்சிக்கட்டுவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு தற்போது ராஜதந்தலுவ திருக்குடும்ப தேவாலயத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேவாலயத்துக்கு அருகில் கூடியுள்ளனர்.

மேலும், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதேச மக்கள், மஹிந்த ராஜபக்ச, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் பலர் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.

48 வயதான சனத் நிஷாந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.