இராணுவ சீருடை அணிந்தால் 50 ஆயிரம் ரூபா அபராதம்: பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தால் 25 ஆயிரம் ரூபா
முப்படையினரின் சீருடைகள் போன்ற ஆடைகளை அணிந்தாலோ அல்லது அடையாளத்தினை பயன்படுத்தினாலோ விதிக்கப்படும் தண்டப்பணம் 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கலவரம் தொடர்பில் நில உரிமையாளர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் தகவல் வழங்குவதற்கு தவறும் நிலையில் 1000 ரூபாவாக காணப்பட்ட அபராதத்தொகை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலகம் விளைவிபோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 100 ரூபா அபராதம் 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிபோருக்கு விதிக்கப்படும் அபராதம் 50 ரூபாவில் இருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.