பாதுகாப்பின்றி தெருவில் இருக்கும் பிள்ளைகள்: யாசகம் எடுக்கும் குழந்தைகள், பொலிஸாரின் நடவடிக்கை

OruvanOruvan

தெருவோர குழந்தைகளை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, தகுந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போது, பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

“2023 ஆம் ஆண்டு தெருவோர குழந்தைகளை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையில், பிச்சை எடுக்க பயன்படுத்தப்பட்ட 102 தெருக் குழந்தைகளை நாங்கள் பொறுப்பு எடுத்துள்ளோம்” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களால் அவர்களை பொருத்தமான பாதுகாவலர்களுடன் வைக்க முடிந்தது. இந்த நடவடிக்கையை 2024 ஆம் ஆண்டிலும் தொடர்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.