சனத் நிஷாந்தவின் சாரதியின் செல்போனை கைப்பற்றிய சி.ஐ.டியினர்: விபத்துக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவே காரணம்

OruvanOruvan

Sanath Nishantha and his driver

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உயிரிழக்க காரணமான கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நடத்த வாகன விபத்து தொடர்பில், அந்த வாகனத்தை ஒட்டிய சாரதியின் செல்போனை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

விபத்து சம்பந்தமாக நடத்தும் விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழு செல்போனை தமது பொறுப்பில் எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாரதி ஏற்கனவே எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாரதி விபத்து நடப்பதற்கு முன்தினம் தனது மரணம் சம்பந்தமாக சமூக வலைத்தளத்தில் இட்டிருந்த பதிவு காரணமாக அவரது தொலைபேசியை பொலிஸார், கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சாரதியிடம் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த சாரதி சமூக வலைத்தளத்தில் இட்டிருந்த பதிவு சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.