சாரதிகளின் கவனத்துக்கு: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

OruvanOruvan

Colombo

பெப்ரவரி 04 இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இது பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட,

  • எதிர்வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காலி வீதியின் ஒரு பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

  • ஜனவரி 29 முதல் பெப்ரவரி மாதம் 2 வரை காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையும், செரமிக் சந்தி தொடக்கம் காலிமுகத்திடல் வரையும் காலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரையும் மூடப்படும்.

  • குறித்த நாட்களில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் குறித்த வீதி மூடப்படவுள்ளது.

  • பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் சுதந்திர தினம் நிறைவடையும் வரையிலும் மேற்குறிப்பிட்ட வீதி மூடப்படும் - என்றார்.