500 கோடி ரூபா மோசடி; தம்பதியர் கைது: 40 சொற்களில் நாளாந்த செய்தி

OruvanOruvan

Short Story 2024.01.27

500 கோடி ரூபா மோசடி; தம்பதியர் கைது

கண்டி, பிலிமத்தலாவை பகுதியில் பிரமிட் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து 500 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழ். காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிபந்தனைகளுடன் விடுக்கப்பட்டனர்.
மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற ரீதியில் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கான சபாநாயகரின் அனுமதி தாமதமாகலாம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பாக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு சபாநாயகரின் அனுமதி கிட்டுவதற்கு சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வரைவு மசோதா, தற்போது சட்ட வரைவுத் திணைக்களத்தின் பரீட்சிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் சபாநாயகர் கையொப்பமிடுவது இன்னும் சில நாட்களுக்கு தாமதமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்தகைக்கு வழங்கப்படவுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம்

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பயா உட்பட பல அரச கட்டிடங்களை குத்தகைக்கு எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசும்பாயவுக்கு மேலதிகமாக கொழும்பு நகரின் புராதன கட்டிடங்களான கஃபூர் கட்டிடம், தேயிலை அருங்காட்சியக கட்டிடம் மற்றும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 3 ஏக்கர் காணித்துண்டுகள் இரண்டு ஆகியவை குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.