தமிழரசு கட்சியின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது: விரைவில் புதிய திகதி அறிவிக்கப்படும், மத்தியக் குழு தீர்மானம்

OruvanOruvan

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டை ஒத்திவைப்பதற்கு பொதுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

மத்தியக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுச் சபையில் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கூட்டத்தின் முடிவில் நாளைய தினம் இடம்பெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுச் சபைக் கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு, அதன் பின்னர் முடிவுகள் எடுக்கப்பட்டு தேசிய மாநாட்டிற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.