நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்விவகாரம்: ரஷ்யா வலியுறுத்தல்

OruvanOruvan

இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் குறித்து அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இதுவரை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இதேவேளை, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விசேட ட்விட்டர் செய்தியொன்றின் மூலம், இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் இலங்கையின் உள் விவகாரம் என்று வலியுறுத்தும ரஷ்ய தூதுவர் எனவே, வெளிநாட்டு சக்திகள் அதில் தலையிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பபில் எழுந்துள்ள கருத்து வௌியீடுகளை ரஷ்யா அவதானித்து வருவதாகவும் ரஷ்ய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.