ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? ஏப்ரலில் ரணிலின் முடிவு: நாடு முழுவதும் கருத்துகணிப்பை நடத்த முடிவு

OruvanOruvan

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பதை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அறிவிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன், ரணில் தொடர்பில் பொதுமக்களின் கருத்து எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி ரணில் தனது தீர்மானத்தை வௌியிடவுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் யார்? என்பது குறித்தும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது