விரைவில் அமைச்சரவை மாற்றம்: கட்சித்தாவல்கள் நிகழும் சாத்தியம், புதியவர்களுக்கு அமைச்சு பதவி

OruvanOruvan

Cabinet

எதிர்வரும் வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றமொன்று நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கிடையே அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவும், புதியவர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அமைச்சுப் பதவிகள் மற்றும் வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த வாரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது