அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கும் விபத்துக்கள்: அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்

OruvanOruvan

Accident in Highway

சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த விதிமுறைகளை மீறும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின்சார விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக விமான நிலையத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்று (26) கெரவலப்பிட்டி இடைமாற்று வீதிக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இதில் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.