ரணிலை ஆதரிக்கும் புதிய கூட்டணி ஆரம்பம்: ஜா - எலயில் பாரிய பேரணி, பலரும் ஆதரவு

OruvanOruvan

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐக்கியத்தின் மூலம் புதிய கூட்டணி அமைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

ஜா - எலவில் புதிய கூட்டணியினால் இன்று (27) இடம்பெற்ற முதலாவது பொதுக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக புதிய கூட்டணியை உருவாக்குமாறு மக்களுக்கு அறிவிக்கும் பாரிய பேரணியொன்று ஜாஎல நகரில் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அந்தக் கூட்டணியின் ஸ்தாபகராக இருப்பதுடன், அதன் செயற்பாட்டுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயற்பட்டு வருகின்றார்.

இந்த பேரணியில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.