வன்புணர்வுக்கு உள்ளான 70 வயது மூதாட்டி உயிரிழப்பு: அடிக்கடி வீட்டிற்கு வருபவர் கைது, பொலிஸார் தீவிர விசாரணை

OruvanOruvan

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் வன்புணர்வுக்கு உள்ளான மூதாட்டியொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

காலி, கரந்தெனிய பிரதேசத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டியொருவர் கடந்த சில நாட்களாக கரந்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

எனினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த மூதாட்டியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவர் வன்புணர்வுக்கு இலக்காகி இருக்கும் விடயம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மூதாட்டியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அவர் எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.