ஓட்டமாவடியில் வேன் - உழவு இயந்திரம் மோதி விபத்து: இன்றைய வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North East Today 27.01.2024

ஓட்டமாவடியில் வேன் - உழவு இயந்திரம் மோதி விபத்து

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இன்று காலை வேன் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியது. செங்கற்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் வேன் ஒன்றுடன் மோதி உழவு இயந்திரம் ஓட்டமாவடி பொது நூலக மதிலை உடைத்துக் கொண்டு நூலக வளாகத்தில் புகுந்து சேதமேற்படுத்தியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திர சாரதி படுகாயமடைந்து, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.