இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது: சுதந்திரதின உரையை தவிர்க்கும் ஜனாதிபதி

OruvanOruvan

பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் ஆரம்பித்துவைக்கப்பட்ட உள்ளதாகவும், கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் பாராளுமன்றத்தில் இயங்கும் 50க்கும் மேற்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தானாக செயலிழக்கும்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முதல் கூட்டத்தொடர் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், நான்குமுறை கூட்டத்தொடர்கள் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டன.

சுதந்திரதின உரையை தவிர்க்கும் ஜனாதிபதி

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 7ஆம் ஆரம்பித்துவைக்கப்படும்.

OruvanOruvan

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்ற மாட்டார் என்றும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்கிராசன உரை மூலம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது கொள்கைப் பிரகடனத்தை வெளிப்படுத்த உள்ளதால் சுதந்திரதின உரையை தவிர்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த ஆண்டும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.