இருளில் மூழ்கிய பம்பலபிட்டிய ரயில் நிலையம்: பயணிகள் பெரும் அசௌகரியம்

OruvanOruvan

Bambalapitiya Railway Station

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு பம்பலபிட்டி ரயில் நிலையம் இருளில் மூழ்கியிருந்தது.

ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், ரயிலை பயன்படுத்தும் பயணிகளும் இதனால் பெரும் அசௌகரியத்துக்கு ஆளாகியிருந்தனர்.

மின்சார கட்டணம் செலுத்தப்பட்ட போதும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் மின்சார கட்டணத்திற்காக 877,741.90 ரூபாவுக்கான 321865 என்ற இலக்கத்தை கொண்ட காசோலை ரயில்வே திணைக்களம் வழங்கிய போதிலும் நேற்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படாமல், மெழுகுவர்த்தியை பயன்படுத்தி ரயில் பணிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.

மேலும், டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் இடத்தில் விளக்கு ஏற்றி அந்த ஒளியில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.