ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை கருப்பு பட்டி போராட்டம்: இன்றைய வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North East Today 26.01.2024

ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை கருப்பு பட்டி போராட்டம்

ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் கருப்புப் பட்டிப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் போராட்டம் கருப்பு ஜனவரியை முன்னிட்டும், ஊடக அடக்குமுறைக்கு முறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் நாளை காலை 9 மணிக்கு மட்டக்களப்பில் அமைத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் யாழில் போராட்டம்

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து இன்று யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தென்னிலங்கை ஊடக அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல்

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான இளைஞன் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜெயக்கொடி கார்திபன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றனர்.

முல்லைத்தீவு விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞனே உயிரிழச்துள்ளார். விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசபரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்ததோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்துகொண்டனர்.