பாராளுமன்றத்தில் அமைதியின்மை: திடீரென சபாபீடத்தில் குதித்த எம்.பிகள்

OruvanOruvan

நிகழ்நிலை காப்புச் சட்டம் சற்றுமுன்னர் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்பால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சட்டத்துக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சட்டமூலம் முழுமையாக மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாகவும் இதற்கும் அனுமதியளிக்க கூடாதெனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாபீடித்திற்குள் இறங்கி கோசம் எழுப்பி வருகின்றனர்.

சபாநாயகர் மற்றும் அரச தரப்பில் திருத்தங்களை முன்வைக்கும் சபை முதல்வருக்கு சபையின் பாதுகாவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பலத்த பாதுகாப்பை அளித்துள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அப்போதை ஐ.தே.க அரசாங்கம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. அத்தருணத்தில் பாராளுமன்றத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

அதன் பின்னர் சபாநாயகருக்கும், சபை முதல்வருக்கும் பாதுகாப்பு வழங்கும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

OruvanOruvan