நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவது பேரழிவு தரும் பின்னடைவாக அமையும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

OruvanOruvan

the Deputy Director of HRWs Asia Division, Meenakshi Ganguly

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் பாராளுமன்றத்தில் அவசரமாக அவசரமாக கொண்டு வர முயற்சிக்கும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆசியப் பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி ஒரு அறிக்கையில்,

  • நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நீண்ட கால சிறைத்தண்டனைகள் மூலம் தண்டிக்கப்படும் பரந்த மற்றும் தெளிவற்ற புதிய பேச்சு தொடர்பான குற்றங்களை உருவாக்கும்.

  • இந்த ஆண்டு இறுதியில் இலங்கை பராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக அச்சுறுத்தும்.

  • முன்மொழியப்பட்ட சட்டமூலம் ஆன்லைன் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் மோசடி ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

  • ஆணையகம் நியமித்த "நிபுணர்களுக்கு" சந்தேக நபர்களின் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையிட அதிகாரம் அளிக்கப்படும். சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு அதிக அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

  • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம், இந்தச் சட்டம் கிட்டத்தட்ட அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும், இது கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்று கூறியுள்ளது.

  • கூகுள், ஆப்பிள் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை அமைப்பான Asia Internet Coalition, இந்த சட்டமூலம் "எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கான ஒரு கொடூரமான அமைப்பு" என்றும், "இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்றும் எச்சரித்துள்ளது.

  • தவறான அரசாங்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தோல்விகளால் ஓரளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறது.

  • 2022 ஆம் ஆண்டில், சீர்திருத்தம் கோரி பல மாதங்கள் நீடித்த போராட்டங்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை வீழ்த்தியது. அந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிருப்தியை அடக்குவதற்கனா முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

  • இலங்கையின் அடக்குமுறைச் சட்டங்கள் பல தசாப்தங்களாக பரவலான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பங்களித்துள்ளது.

  • நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவது பேரழிவு தரும் பின்னடைவாக இருக்கும் - என்றும் அவர் எச்சரித்தார்.