3 மீனவர்களை கடலில் தூக்கி எறிந்து கொலை: 11 வருடங்களின் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

OruvanOruvan

Fishing Boats in Sri Lanka

2012 ஆம் ஆண்டு மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) மரண தண்டனை விதித்துள்ளது.

3 மீனவர்களை இழுவை படகில் இருந்து கடலில் தூக்கி எறிந்து கொலை செய்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க முயற்சித்த சந்தேக நபர்கள் மீன்பிடி படகு ஒன்றை கடத்திச் சென்றதன் பின்னர் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன.

சந்தேகநபர்கள், மீனவர்கள், கடத்திச் செல்லப்பட்ட இழுவை படகில் மூன்று மீனவர்களை தூக்கி எறிந்ததாகவும், அவர்களது முயற்சியின் போது பலரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 2 மில்லியன் ரூபா அபராதமும் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

கடந்த 2012 அக்டோபர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள், இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற தேஜான் என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டது.

படகிலிருந்த மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டனர், மேலும் இரு மீனவர்கள் படுகாயமடைந்து கடலில் வீசப்பட்டனர். மற்றும் படகு கடத்தப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர் 11 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், வழக்கு விசாரணையின் போது மூன்று பிரதிவாதிகள் மரணமடைந்ததால், அவர்கள் இல்லாமல் 08 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில், 07 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.