கொம்பனி வீதியில் வெளிநாட்டவர் மர்ம மரணம்: உறவினர் வரும்வரை சடலம் பொலிஸ் பாதுகாப்பில்

OruvanOruvan

Mysterious death of a foreigner

கொம்பனி வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து சடலமொன்று இன்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் நடப்பட்டிருந்த பூக்கன்றுகளை சுத்தம் செய்வதற்காக சென்ற தொழிலாளி ஒருவரே குறித்த வெளிநாட்டவர் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

கொம்பனி வீதி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் வரும் வரை சடலத்தை பொலிஸ் பிரேத அறையில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.