கட்டார் வாகன விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்: இறுதி கிரியை நிறைவு

OruvanOruvan

vehicle accident

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த இளைஞர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில், சடலத்தை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.