கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம்: காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு 9.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.